Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
ஓலை மொழி.... இணைய வழி
11/02/2025 Duração: 14minசங்க இலக்கிய இலக்கண நூல்களில் முக்கியமான நூல்களை, எண்ம மயப்படுத்தல் அல்லது கணினி மயப்படுத்தல் என்ற திட்டத்திற்காக European Research Commission ஒரு கணிசமான தொகை பணத்தை 2014ஆம் ஆண்டில் ஒதுக்கியது. அந்தத் திட்டத்தில் முக்கிய பங்காற்றும் பேராசிரியர் விசயவேணுகோபால் அவர்கள் தனது பின்னணி பற்றியும் இந்தத் திட்டம் பற்றியும் குலசேகரம் சஞ்சயனுடன் அலசியிருந்தார்.
-
சில வங்கிகள் வட்டி வீதத்தை குறைக்க ஆரம்பித்துள்ளன - மற்ற வங்கிகளும் குறைக்குமா?
11/02/2025 Duração: 01minஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னரே மற்றொரு பெரிய நிதி நிறுவனமான AMP தனது நிலையான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
2025-ஆம் ஆண்டு உலகில் சிறந்த விமான சேவை எது தெரியுமா?
10/02/2025 Duração: 02minஆண்டுதோறும் Airlinerating.com உலகளவில் சிறந்த 25 சிறந்த விமான நிறுவனங்களை தெரிவு செய்து வழங்கும் விருதில் தென் கொரிய கொடி உள்ள Korean Air முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
'ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பணக்கார முதலீட்டாளர்களுக்கான விசா அறிமுகம்' - Peter Dutton
10/02/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( செவ்வாய்க்கிழமை 11/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருப்பு நேரம் எங்கு அதிகம் தெரியுமா?
10/02/2025 Duração: 02minமேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியைத் தருகிறார் செல்வி.
-
How to access parental leave pay in Australia - ஆஸ்திரேலியாவில் parental leave கொடுப்பனவு பெறுவது எப்படி?
10/02/2025 Duração: 10minIn Australia, some parents can receive parental leave payments from the government and their employers. But not everybody is eligible. This article breaks down what’s available, who can claim, and how to access these benefits. - ஆஸ்திரேலியாவில், சில பெற்றோர்கள் அரசிடமிருந்தும், அவர்களின் முதலாளிகளிடமிருந்தும் பெற்றோர் விடுப்பு- parental leave கொடுப்பனவுகளைப் பெறலாம். ஆனால் அனைவரும் இதற்குத் தகுதியுடையவர்கள் அல்ல.இந்த விவரணத்தில், parental leave கொடுப்பனவுகள் என்னென்ன கிடைக்கின்றன, யார் தகுதியுடையவர்கள், அவற்றை எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.
-
ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?
10/02/2025 Duração: 02minஆஸ்திரேலியாவில் பல அழகிய கடற்கரைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவை எவை என்பது தெரியுமா? இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
புற்றுநோய் வந்தவர்களுக்கொரு புதிய பாலம்
10/02/2025 Duração: 14minWorld Cancer Day – உலக புற்றுநோய் தினம், February நான்காம் நாள் அவதானிக்கப்பட்டது. புற்றுநோய் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், புற்றுநோயைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் செய்யப்படும் பணிகளைப் போற்றவும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அவதானிக்கப் படுகிறது.
-
Starlink சேவை குறித்து நாம் கவலைப்பட வேண்டுமா?
10/02/2025 Duração: 06minStarlink சேவை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர், Elon Musk. உலகின் மிகப் பெரிய பணக்காரர். தற்போது, அமெரிக்க அதிபர் Donald Trump இன் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவர். அவரது நிறுவனமான Starlink வழங்கும் இணைய சேவையை ஆஸ்திரேலியர்கள் நம்பியிருப்பது குறித்து சில நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
10/02/2025 Duração: 11minடெல்லி தேர்தலில் பாஜக அபார வெற்றி! 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியதன் பின்னணி, தமிழக ஆளுநர் ரவிக்கு 12 மசோதாக்களை நிறுத்தியது ஏன் என்று இந்தியா உச்சநீதிமன்றம் கடும் கண்டனம், ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் திமுக அமோக வெற்றி மற்றும் கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வென்றது ஆஸ்திரேலியா
10/02/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 10/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
07/02/2025 Duração: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (01 பிப்ரவரி – 08 பிப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 08 பிப்ரவரி 2025 சனிக்கிழமை.
-
Are you breaching copyright when using social media? - சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பதிப்புரிமையை மீறுகிறீர்களா?
07/02/2025 Duração: 10minHave you ever shared someone else’s video or music on social media without their permission? Chances are you were infringing their copyright. Understanding how copyright is applied will help you avoid awkward situations and potentially serious consequences. - வேறொருவரின் வீடியோ அல்லது இசையை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்களா? நீங்கள் அவர்களின் பதிப்புரிமையை மீறியிருக்கலாம்.
-
மௌனத் திரைப் படங்களுக்கு உயிர் கொடுக்கிறார் ஹரி சிவனேசன்
07/02/2025 Duração: 09minசர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர், வீணை இசைக் கலைஞர், பல இசைக்கருவிகள் வாசிப்பவர் மற்றும் பாடகர். இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட கலைஞரான ஹரி, இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் பாரம்பரிய இந்திய இசைக் கலைஞர்களின் புதிய தலைமுறையை சம காலத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவரது தனித்துவமான பாணி தென்னிந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய மரபுகளை துணிச்சலாக இணைக்கிறது.
-
தீவிரவாதத்தை எதிர்க்கவும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் சிட்னி மேயர்கள் ஒன்றுபடுகிறார்கள்
07/02/2025 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
06/02/2025 Duração: 08minமிக எளிமையான முறையில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தினம், வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டம்,வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை-இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
அரச வாகனத்தை சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தியதால் பதவியிழந்த அமைச்சர்!
06/02/2025 Duração: 06minNSW மாநிலத்தில் அரச வாகனத்தை சொந்தக் தேவைகளுக்கு பயன்படுத்தியதால் அம்மாநில போக்குவரத்துக்கு அமைச்சர் Jo Haylen கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
மனநல மருத்துவ அமைப்பில் நிலவும் அழுத்தங்களினால் பாதிக்கப்படும் இளைஞர்கள்!
06/02/2025 Duração: 05minமனநல சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை சமாளிக்க நாட்டில் உள்ள மனநல அமைப்பு போராடி வரும் நிலையில் இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Gabrielle Katanasho எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
"பாரதி உயிரோடு இருந்தால், தமிழ்நாட்டில் அனைத்தும் தமிழ்மயமாகியிருக்கும்."
06/02/2025 Duração: 22minமகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதே எட்டயபுரத்தில் பிறந்த எழுத்தாளர் இளசை மணியன் அவர்கள் மகாகவி பாரதி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
-
Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க MasterCard-இன் புதிய திட்டம்!
06/02/2025 Duração: 06minCredit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க 2030-ஆம் ஆண்டிற்குள் கார்டுகளில் இருந்து 16 இலக்க எண்ணை அகற்றும் திட்டத்தை MasterCard அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.