Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 63:23:10
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை: mpox வைரஸ் ஏற்படுத்திய சுகாதார அவசர நிலை

    19/08/2024 Duração: 11min

    mpox வைரஸ் பரவுவதை உலகளாவிய சுகாதார அவசர நிலை என்று WHO அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், இந்த வைரஸ் கவலைக்குரிய ஒரு புதிய திரிபா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அதிகாரிகள் முனைந்துள்ளார்கள்.

  • இந்தியாவை உலுக்கி வரும் பெண் மருத்துவர் கொலை விவகாரம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

    19/08/2024 Duração: 09min

    இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்:

  • புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதில் மாற்றம் கொண்டுவர புதிய சட்டம்?

    19/08/2024 Duração: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/08/2024) செய்தி.

  • தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அகதிகள்- புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்

    17/08/2024 Duração: 10min

    ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சனிக்கிழமை (17 ஆகஸ்ட்) தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் அடலைட் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கேதீஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    16/08/2024 Duração: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 17 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறக்கூடிய 10 தொழில்துறைகள்

    16/08/2024 Duração: 02min

    இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் ஆஸ்திரேலியர்களின் ஊதிய வளர்ச்சி சிறிது குறைந்துள்ள போதிலும்< சராசரி ஆஸ்திரேலிய முழுநேர பணியாளர் வாரத்திற்கு 1923 டொலர்கள் சம்பாதிப்பதாக புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் புதிய தரவு கூறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் எந்தத்துறைகளில் பணிபுரிபவர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் என்ற செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் mpox வைரஸ் தொற்று அதிகரிப்பு!

    16/08/2024 Duração: 02min

    நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் mpox எனப்படும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருவதாக NSW Health எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Tax impact: What happens when 'work-from-home' ends? - வீட்டிலிருந்து வேலை செய்வது முடிவுக்கு வருவது Taxயில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

    16/08/2024 Duração: 09min

    Leader of the Opposition, Peter Dutton, has proposed offering tax concessions to those living in non-urban areas. Meanwhile, some states, including NSW, have requested that civil servants abandon working from home and return to the office. Armstrong, a certified Chartered Accountant in Australia with over two decades of experience in audit and taxation, analyses both issues." Produced by RaySel. - நகரம் அல்லாத இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு வரிச் சலுகை (Tax concession) வழங்கலாம் என்று எதிர்கட்சித் தலைவர் Peter Dutton அவர்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். மேலும் NSW உள்ளிட்ட சில மாநிலங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை கைவிட்டு அரசு ஊழியர்கள் அலுவலகம் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த செய்திகள் குறித்து ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    16/08/2024 Duração: 08min

    இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழ்தரப்புக்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ள வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான ஏனைய செய்திகளுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Embracing the wisdom of traditional Indigenous medicine - பூர்வீக குடிமக்களின் மருத்துவ ஞானத்தை நாம் எப்படி பயன்படுத்தலாம்?

    16/08/2024 Duração: 10min

    Understanding and respecting Indigenous knowledge of medicine may be the key to providing more holistic and culturally sensitive care in today's healthcare setting. - மருத்துவம் பற்றிய பூர்வீகக் குடிமக்களின் அறிவைப் புரிந்து கொள்வதும் மதிப்பதும் இன்றைய சுகாதாரக் கட்டமைப்பில் மிகவும் முழுமையான மற்றும் கலாச்சார ரீதியாக உணர் திறன் கொண்ட பராமரிப்பை வழங்குவதற்கான திறவுகோலாக அமையலாம். ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், பூர்வீகக் குடி மக்களின் பாரம்பரிய மருத்துவத்தைப் புரிந்து கொள்வதும் மதிப்பதும் இன்றைய சுகாதார அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை எவ்வாறு வழங்கக் கூடும் என்பதை ஆராய்வோம். Yumi Oba ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • "காஸாவில் நடப்பது மனிதக் கொலையின் மிக மோசமான மைல்கல்" - ஐநா

    16/08/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/08/2024) செய்தி.

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து பிரிஸ்பேன் கற்கவேண்டிய பாடம் என்ன?

    16/08/2024 Duração: 10min

    பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் எப்படி இருக்கும் என்பதை வடிவமைக்கத் தொடங்கும் போது, விளையாட்டு அமைப்பாளர்கள் பாரிஸ் 2024 போட்டிகளிலிருந்து என்னவெல்லாம் எடுத்துக்கொள்வார்கள் அல்லது தவிர்ப்பார்கள்? அலசுகிறார் கன்பராவிலுள்ள விளையாட்டு ஆர்வலர் வெங்கடாசலம் ஜெகநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • தவறுதலாக வைப்புச்செய்யப்பட்ட பணத்தைக் கையாடிய வழக்கு: இந்தியருக்கு சிறை

    15/08/2024 Duração: 02min

    கிரிப்டோ நிறுவனம் தவறுதலாக வைப்புச்செய்த பணத்தை தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜதீந்தர் சிங்கிற்கு விக்டோரிய நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நாட்டில் எத்தனைபேர் பிறரின் உதவியுடன் வாழ்வை முடித்துக்கொண்டனர் தெரியுமா?

    15/08/2024 Duração: 02min

    கருணைக்கொலை சட்டம்- voluntary assisted dying அதாவது மற்றொருவர் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான சட்டத்தைப் பயன்படுத்தி நாடுமுழுவதும் இதுவரை 2460 பேர் இறந்துள்ளதாக புதிய தரவு கூறுகின்றது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இளமை-பெற்றோர்-முதுமை: வாழ்வு தரும் பாடம் என்ன?

    15/08/2024 Duração: 09min

    தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். அவர் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்புக்கு “முதுமை” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.

  • Left-handers have higher IQ - இடதுகை பாவனையாளர்கள் அதீத புத்திசாலிகள்!!

    15/08/2024 Duração: 21min

    August 13th is International Left-handers Day. Our presenter Kulasegaram Sanchayan talks to a practicing Consultant psychiatrist, Shanti Paramesvaran, on left-handedness; and with some of our listeners, Gnanam, Murthy and his wife Logi, Malini and her daughter Prashanthy who are all, you guessed it, left-handers. - இடதுகை பாவனையாளர்களை கௌரவிக்கும் சர்வதேச நாள், ஆகஸ்து 13ம் நாள். இன்றைய இடது கைப் பாவனையாளருக்கான சர்வதேச நாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில், மனோதத்துவ நிபுணராகக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் Dr சாந்தி பரமேஸ்வரன் அவர்களின் கருத்துகளுடன், இடது கைப் பாவனையுள்ள நேயர்கள் ஞானம், மூர்த்தி - லோகி தம்பதியினர், மாலினி அவர் மகள் பிரஷாந்தி ஆகியோரது அநுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்..

  • What is 'social cohesion', and can it be measured? - 'சமூக ஒற்றுமை' என்றால் என்ன, அதை அளவிட முடியுமா?

    15/08/2024 Duração: 06min

    You've heard the term a lot... social cohesion. But what does it actually mean? And can it be measured? - சமூக ஒற்றுமை என்ற சொல்லை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்ன? அதை அளவிட முடியுமா? என்று சிந்தித்திருக்கிறீர்களா?

  • உலகின் முதல் டிஜிட்டல் அடையாள முறை ?

    15/08/2024 Duração: 09min

    இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் ஒரு புதிய டிஜிட்டல் அடையாள முறையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று அறிவித்துள்ளது. அனைத்து ஆஸ்திரேலியர்களும் கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களை ஒப்படைப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தங்கள் மொபைல் தொலைபேசிகளில் டிஜிட்டல் அடையாள முறையைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

  • 'வெறுக்கத்தக்கது': தப்பி வரும் பாலஸ்தீனியர்களைத் தடை செய்ய பீட்டர் டட்டனின் அழைப்புக்கு கண்டனங்கள்

    15/08/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 15/08/2024) செய்தி.

  • போர் நிலத்து அகதிகள் ஆஸ்திரேலியாவிற்குள் வேண்டாம்- டட்டன்

    14/08/2024 Duração: 02min

    போர் நிலமாக மாறியுள்ள காசாவிலிருந்து வரும் பலஸ்தீனியர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

página 19 de 25